வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு ரோபோ உதவியுடன் விபிள் அறுவை சிகிச்சை !
வேலூர் மாவட்டம் சிஎம்சி வேலூரில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு ரோபோ உதவியுடன் பைலோரஸ் பாதுகாப்பு விபிள் அறுவைச் சிகிச்சை வெற்றிகர மாக நடைபெற்றது வேலூர்: கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி), வேலூரின் குழந்தைகள் அறுவைச் சிகிச்சைத் துறை 10 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தைக்கு ரோ போ உதவியுடன் பைலோரஸ் பாதுகாப்பு விபிள் (Robotic Pylorus-Preserving Whipple) அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இது குழந்தைகளு க்கான ரோபோ அறுவைச் சிகிச்சைத் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லா கும்.அந்தக் குழந்தைக்கு பித்தநாளங்க ளில் (Bile Ducts) உருவாகும் அரிய வகை புற்றுநோய் கண்டறியப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்கு முன் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்துவயிற்றின் ஒரு முக்கியப் பகுதியான பைலோரஸை பாதுகாத்தபடியே முழுக் கட்டியும் அகற்றப் பட்டது. இந்த அறுவைச் சிகிச்சை, உயர் தெளிவுடைய முப்பரிமாண (3D) காட்சி மற்றும் மிகத் துல்லியமான பிரித்தெடுத் தல் மற்றும் நுணுக்கமான மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள உதவும் மேம்பட்ட ரோபோ தொழில் நுட் பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
இரண்டு வாரங்கள் நீண்ட மீட்சிக்குப் பிறகு, குழந்தை நல்ல முன்னேற்றத்து டன் உள்ளது. தொடர்ந்து சிகிச்சையின் ஒரு பகுதியாக மேலும் கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) அளிக்கப்படவுள்ளது. சிஎம்சி வேலூரின் குழந்தைகள் அறுவைச் சிகிச்சைக் குழு, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் சிக்க லான கட்டி அகற்றும் மற்றும் மறுசீரமை ப்பு ரோபோ அறுவைச் சிகிச்சைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ரோ போ தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால், நுரையீரலைப் பாதுகாக்கும் அறுவைச் சிகிச்சைகள் உள்ளிட்ட பல மேம்பட்ட குறைந்த காயத்துடன் செய்யப்படும் (Minimally Invasive) அறுவைச் சிகிச்சைகள் குழந்தைகளுக்கு சாத்தியமாகியுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் குழந்தைகளுக்கு உலகத் தரம் வாய்ந்த ரோபோ மற்றும் மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை சேவைகளை வழங் குவதில் சிஎம்சி வேலூர் தனது புதுமை மற்றும் சிறப்பிற்கான அர்ப்பணிப்பை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக