குடியாத்தத்தில் அம்மனுக்கு 1008 பால் குடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

குடியாத்தத்தில் அம்மனுக்கு 1008 பால் குடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் !

குடியாத்தத்தில்  அம்மனுக்கு  1008 பால்குடம்  ஆயிரத்துக்கும்  மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் !
குடியாத்தம், ஆக.21 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை நகரப் பகுதியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ மாசுபடா அம்மன் கோவிலில் 6-ம் வெள்ளி ஊஞ்சல் உற்சவத்தை முன்னி ட்டு, உற்சவக் குழு சார்பில் 1008 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது காமாட்சியம்மன் பேட்டையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடங் களை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து தேவி ஸ்ரீ மாசுபடா அம்மன் கோவிலை அடைந்தனர். விழாவு க்கு தலைவர் தயாளன், செயலாளர் மாதவன், பொருளாளர் கருணாகரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதையடுத்து இரவு 8 மணியளவில் செல்லியம்மன் கோவிலில் இருந்து சக்தி பூ கரகம் அலங்கரிக்கப்பட்டு மேளதாளங் களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட் டது. பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், 108 வேல் குத்துதல், ஆகாய மாலை அணிவித்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தி னர். முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து அம்மனை வழிபட்டனர். தொ டர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக் கப்பட்ட பூந்தேர் மேளதாளங்களுடன் முக்கிய வழி சாலைகளில் வீதியுலா நடை பெற்றது. விழாவில் கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலத்திலிருந்து குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச்சேர்ந்த லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad