கயத்தாறு வட்டம், காமநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தூய பரலோக மாதா பேராலயத் திருவிழாவினை முன்னிட்டு 14.08.2026 (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், காமநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தூய பரலோக மாதா பேராலயத்திருவிழாவினை முன்னிட்டு 14.08.2026 (வெள்ளிக்கிழமை)
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.
இது செலாவணி முறிச் சட்டத்தின்படி ((Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்குப் பதிலாக 22.08.2026 நான்காம் சனிக்கிழமை அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக