இந்நிகழ்வில் கல்லூரியின் தாளாளர் மாமல்லன் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயக்குமார் வரவேற்புரையாற்றினார். விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சுதந்திர தின விழாவிற்கு வந்திருந்த கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் ஸ்டான்லி ஜாண்சன் விழாவை தொகுத்து வழங்கினார்.
சுதந்திர தின விழா ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகர்கள் செய்து இருந்தனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பும், காலை உணவும் வழங்கப்பட்டது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக