விநாயகபுரம் ஆச்சாரி நகர் பகுதியில் வாராஹி அம்மன் கோயிலில் மூன்றாம் ஆண்டு கூழ்வார்க்கும் திருவிழா !
குடியாத்தம் , ஆகஸ்ட் 2 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் விநாயகர் புரம் பகுதியில் உள்ள வாராஹி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது முன்ன தாக முக்கிய வீதிகளின் வழியாக மேல தாளங்கள் முழங்க கரக ஊர்வலமாக சென்று கோயிலை வந்து அடைந்தது.
தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைந் துள்ள வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் திபாரதனை நடந்தது. பகல் ஒரு மணிக்கு அம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் அனைவருக்கும் மஞ்சள் குங்குமம் புடவை ஜாக்கெட் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி . லட்சுமி அம்மாள் ஏற்பாடு செய்திருந்தார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக