மாநகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டு 1558 தூய்மை பணியாளர்களைக் கொண்டு Triumph World Record !
வேலூர் , ஆகஸ்ட் 2 -
வேலூர் மாவட்டம் வேலூர் நகராட்சி 01.08.2008 அன்று முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருவதை முன்னிட்டு அதனை பெருமைப்படுத்தும் விதமாக இன்று (01.08.2026) 1558 தூய் மை பணியாளர்களைக் கொண்டு Triumph World Record நிறுவனத்துடன் இணைந்து வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் மாநகராட்சியின் இலட்சினையாக (Logo) தூய்மை பணியாளர்கள் நின்ற உலக சாதனை நிகழ்வை அங்கீகரித்து Triumph World Record நிறுவனத்தின் தலைமை நடுவர். சு. கிருஷ்ணகுமார் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்களிடம் உலக சாதனை சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பி னர்கள் மு.ம.வினோத் கண்ணன் வேலூர் மரு.ம.சுதாகர் காட்பாடி மாநகராட்சி துணை மேயர் மா சுனில் குமார், மாநக ராட்சி ஆணையாளர் அ.சுல்தானா, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் மரு. பிரதாப் குமார். மாமன்ற உறுப்பினர் கா. சு. சண்முகம் மற்றும் ஒருங்கிணைப் பாளர் பி. நிக்ஷன் ஆகியோர் உடன் இருந்தனர்.வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக