சமூக சேவகர் ஆர்.எஸ்.ராஜன் நாகர்கோவில் மாநகராட்சி மேயருக்கு கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

சமூக சேவகர் ஆர்.எஸ்.ராஜன் நாகர்கோவில் மாநகராட்சி மேயருக்கு கோரிக்கை.

தமிழக வெற்றிக் கழக பிரமுகர் மற்றும் சமூக சேவகர் ஆர்.எஸ்.ராஜன்
நாகர்கோவில் மாநகராட்சி மேயருக்கு கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள பீச்ரோடு வலம்புரிவிளை குப்பை கிடங்கு ஏறத்தாழ சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்க பட்டு அன்றைய காலகட்டத்தில் பீச்ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு ஊர்களில் குறைவான அளவில் தான் மக்கள் வாழ்ந்து வந்தனர்.

தற்போது கால மாற்றத்தின் காரணமாக பீச்ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் வீடுகள் அமைத்து அடர்த்தியாகவும் நெருக்கமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாகர்கோவில் வரும் பொது மக்கள் பெரும்பாலனோர் பீச்ரோடு ஜங்சன் வந்து தான் செல்ல வேண்டும்.

தற்போது தினந்தோறும் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை எடுத்து கொண்டு பீச்ரோடு வலம்புரிவிளை குப்பை கிடங்கில் கொண்டு சென்று போட செல்லும் வண்டிகளில் இருந்து தினந்தோறும் அந்த பகுதியை சுற்றியுள்ள ரோடுகளில் கழிவுநீர் சிந்தி கொண்டு செல்வதால் பொது மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகிறார்கள்.

எனவே அந்த பகுதி பொது மக்களின் சுகாதாரத்தை பேணி காக்கும் விதத்தில் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் தற்போது மூடப்பட்ட நிலையில் உள்ள பல குவாரிகளில் பாறைகளை உடைத்து கல் எடுக்க பட்டு குண்டுகளாக (பள்ளமாக) இருக்கும் பகுதிகளில் உள்ள குண்டுகள் அனைத்திலும் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தினந்தோறும் எடுத்து கொண்டு செல்லப்படும் குப்பைகள் அனைத்தையும் அங்கு கொண்டு சென்று போட்டு(தட்டி) நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் நலன் கருதி நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட நிருபர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad