ரோட்டரி சங்கம் திருமகள் ஆலை கல்லூரி தலைமை மருத்துவமனை இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரத்ததான முகாம் குடியாத்தம் ரோட்டரி சங்கம், அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்த ரத்த தான முகாம் 25 /8 /2026 செவ்வாய்க் கிழமைய ன்று காலை 10 மணி முதல் முற்பகல் ஒரு மணி வரை கல்லூரி. வளாகத்தில் நடை பெற்றது நிகழ்ச்சிக்கு ரோட்டரி தலைவர்
ரொட்டேரியன் டி. எஸ்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாரரத்த மைய அலுவலர் டாக்டர் பியூலா முன்னிலை வகித்தார்
கல்லூரி முதல்வர் முனைவர் பெ. சீனு வாச குமரன் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் தலைவர் என். சத்தியமூர்த்தி விளக்க உரை ஆற்றினார் ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர், ரத்த தான பிரிவு மாவட்ட ஆலோசகர் ஜே.கே. என். பழனி, மருத்துவ அலுவலர் Dr S.மஞ்சு நாதன் முகாமைத் துவக்கி வைத்தனர். ரோட்டரி மாவட்ட ரத்த தான தலைவர் Dr V.தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ரத்த தானத்தின் முக்கி யத்துவத்தை விளக்கினார் முகாமில் 55 யூனிட் ரத்தம் மாணவ மாணவிகளிடமி ருந்து தானமாக பெறப்பட்டது. முகாமில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் டி.என் ராஜேந்திரன்,ஆர். கே.மகாலிங்கம், எஸ்.வேல்முருகன் ஏ.மேகராஜ்,வி.என். அண்ணாமலை ஆர்.வி.ஹரி கிருஷ்ணன் மற்றும் ரத்ததான தலைவர் எஸ். பிரேம் குமார், துணைத்தலைவர்கள் கே.எஸ். மணிகண்டன்,கே. பிரபு சங்க உறுப்பினர் கள் எம் ஜெயச்சந்திரன், பிரஸ் ஜெ. தமிழ்ச்செல்வன், மதியழகன், கே.எம் ராஜேந்திரன், பாலமுருகன், முனைவர் சம்பத்குமார், அருண்குமார், சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். பேராசிரியர்கள் கருணாநிதி,கா அருளா னந்தம், கற்பகம்,சுஜாதா, கல்பனா ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டார்கள். இறுதியில் செயலா ளர் ஜெ. தமிழ்ச்செல்வன் நன்றியுரை ஆற்றினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக