கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை மற்றும் கரையோர பகுதிகளில், குறிப்பாக தாழ்வான பகுதிகளில் அவ்வப்போது கடல் அலைகள் சீற்றத்துடன் எழும்பி, கடல் நீர் கரையை நோக்கி வேகமாக புகும் நிலை ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்களும், மீனவர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் மற்றும் உயர் அலைகள் எழும் அபாயத்தை குறிக்கும் ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட கடலோர மீனவ மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதையும், கடலில் குளிப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆபத்தான கடற்கரை பகுதிகளில் உள்ள நுழைவு வாயில்கள் மூடப்பட்டு, காவல்துறை பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறிய படகுகளை கரையோர பகுதிகளில் இயக்க வேண்டாம் என்றும், படகுகள் ஒன்றோடு ஒன்று மோதுவதையும் சேதமடைவதையும் தவிர்க்கும் வகையில் போதிய இடைவெளியுடன் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக