தொகுதி மறுவரைவு விவகாரம் தமிழ கத்தின் உரிமையைப் பாதுகாக்க காங்கிரஸ் விழிப்புணர்வு ஊர்வலம் !
குடியாத்தம், ஆக.9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காந்தி சிலை முதல் பழைய பேருந்து நிலையம் வரை அமைதி பேரணி – மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் தமிழகத்தின் அரசி யல் பிரதிநிதித்துவத்தையும் மாநில உரிமைகளையும் பாதிக்கும் வகையில் அமையக்கூடிய தொகுதி மறுவரைவு நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார் பில் குடியாத்தத்தில் விழிப்புணர்வு அமைதி ஊர்வலம் நடைபெற்றது.மத்திய அரசின் தொகுதி மறுவரைவு நடவடிக்கை தமிழகத்துக்கு நியாயமற்ற பாதிப்பை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கட்சி தொடர் ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்த விழிப்புணர்வை பொது மக்க ளிடம் ஏற்படுத்தும் வகையில் இந்த ஊர் வலம் நடத்தப்பட்டது.
காந்தி சிலையில் தொடங்கி பேருந்து நிலையம் வரை குடியாத்தம் நகராட்சி காந்தி சிலை அருகே தொடங்கிய ஊர் வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.ஊர்வலத்துக்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலை வர் கு.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் இலியாஸ் பாஷா, விஜயேந்திரன், சரவணன், வாசு, ராஜ சேகரன், இர்ஷாத் அஹ்மத், முஜம்மில் அஹ்மத், செங்குட்டுவன், பாஸ்கரன், உவைஸ் அஹ்மத், குபேந்திரன், அன்பரசி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி மேற்கு தலைவர் டாக்டர் நவீன் பிரபு வரவேற்புரையாற்றினார். கிழக்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் லாலால ஜபதி தொடக்கவுரையாற்றினார்.தமிழக த்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும் ஊர்வலத்தைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் நிர்வாகி கள், தொகுதி மறுவரைவு என்பது வெறும் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பான பிரச்னை மட்டுமல்ல என்றும் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்து வம், மக்கள் தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவம், மாநிலங்களின் உரி மைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களு டன் தொடர்புடைய முக்கியமான விவ காரம் என்றும் தெரிவித்தனர்.மேலும், மக்கள் தொகை கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சமூக நல நடவடிக்கைகளை முன்னெடுத்த மாநிலங்களுக்கு எதிர் காலத்தில் அரசியல் பிரதிநிதித்து வத் தில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.தமிழகத்தின் நலனையும் உரிமைகளையும் பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கி ணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ப வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர்கிருஷ் ணவேணி ஜலந்தர், மாவட்ட நிர்வாகிகள் சேகரன், பாரத், நவீன்குமார், மாவட்ட நெசவாளர் பிரிவு தலைவர் ஜெயவேல் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சா.சங்கர், ப.செல்வக்குமார், ஜெகந்நாத ரெட்டி, நித்தியானந்தம், தாண் டவமூர்த்தி, சேகர், தனசேகரன், ஆரோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகிப், பள்ளிகொண்டா பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிக்கந்தர் மற்றும் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலை வர் கோமதி குமரேசன் உள்ளிட்ட பல் வேறு பிரிவு நிர்வாகிகளும் பங்கேற்ற னர். மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர் அன்ப ரசன், ஓபிசி பிரிவு தலைவர் ராகேஷ், சிறுபான்மையினர் பிரிவு தலைவர் நவாலி தாஹீர், மனித உரிமை பிரிவு தலைவர் யுவராஜ், ஆர்ஜிபிஆர்எஸ் தலைவர் ஆனந்தவேல், ஊடகப் பிரிவு தலைவர் ஆம்புலன்ஸ் ராஜேஷ் உள்ளிட் டோரும் கலந்து கொண்டனர். மாநில எஸ்சி பிரிவு பொதுச் செயலாளர் சுரேஷ், மாநில ஓபிசி பிரிவு பொதுச் செயலாளர் சுனில், மாநில எஸ்சி பிரிவு செயலாளர் காத்தவராயன், மாநில ஓபிசி பிரிவு செயலாளர் ஜோயல் ஜேசுராஜ் மற்றும் மாவட்ட செயலாளர்கள் செந்தில், தமிழ ரசன், சரத் சந்தர், முனுசாமி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.தொடரும் விழிப்புணர்வு பிரசாரம் தொகுதி மறு வரைவு குறித்த விவகாரத்தில் தமிழக மக்களிடையே விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையில் தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.நிகழ்ச்சி யின் நிறைவில் குடியாத்தம் வட்டார காங்கிரஸ் கமிட்டி மேற்கு தலைவர் வீராங்கன் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக