வேலூர் பி.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

வேலூர் பி.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை !

வேலூர் பி.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை !
வேலூர் , ஆகஸ்ட் 28 -
          வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, அண்ணா சாலையில் அமைந்துள்ள பி.டி.ஓ. அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புக் காவல் துறை ஆய்வாளர் மைதிலி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், திடீரென சோதனையில் ஈடு பட்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது பி.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள அறைகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட் டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வரு கின்றனர். மேலும், அலுவலக  வளாகத் தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை யும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் பி.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு சிலர் மடியில் கனம் உள்ளவர்களுக்கு பரபரப்பு ஏற் பட்டுள்ளது. சோதனை முடிவில் மேலும் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க் கப்படுகிறது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad