வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்த அதிமுக நிர்வாகி பரிதாபமாக உயிரிழப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 ஆகஸ்ட், 2026

வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்த அதிமுக நிர்வாகி பரிதாபமாக உயிரிழப்பு

வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்த அதிமுக நிர்வாகி பரிதாபமாக உயிரிழப்பு
வேலூர் , ஆகஸ்ட் 31 -
      வேலூர் மாவட்டம் முன்னாள் முதல்வர் எடப்பாடி  பழனி சாமி  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தின் பொதுச் செயலாளர் அவர்கள் வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள் ளார் அவரை சந்திக்க சென்ற அதிமுக நிர்வாகி பரிதாபமாக உயிரிழப்பு வேலூரில் செயல்பட்டு வரும் நட்சத்திர லாட்ஜில் முதலுதவிஅளிக்கப்படவில்லை லிப்ட் ஆப், ஏசி ஆப் என குற்றச்சாட்டு – ஆம்புலன்ஸ் வருவதிலும் தாமதம்; அரசு உரிய விசாரணை நடத்த கோரிக்கை

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, தோட் டப்பாளையம் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் லாட்ஜ் ஓட்டலில், முன் னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செய லாளருமான எடப்பாடி கே. பழனிசாமியை சந்திக்கும் ஆவலுடன் வந்த அதிமுக நிர் வாகி திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை யும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அரப்பாக்கம்  அதிமுக கிளை செயலாள ராக இருந்த காமராஜ் என்பவர்,முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேலூர் வருகையையொட்டி அவரை சந்திப்பதற் காக தோட்டப்பாளையத்தில் உள்ள தனி யார் நட்சத்திர ஓட்டலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாக கூட்ட நெரிசலில் நின்றிருந்த நிலையில், நட் சத்திர லாட்ஜ ஓட்டலில் ஏசி முறையாக செயல்படவில்லை என்றும், லிப்ட் பயன் பாடு நிறுத்தப்பட்டிருந்ததாகவும் கூறப் படுகிறது. இதனால் கடும் வெப்பம் மற்றும் கூட்ட நெரிசலில் காமராஜுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், அவர் மயங்கி விழுந்ததாகவும் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயங் கிய அவரை உடனடியாக மருத்துவமனை க்கு அழைத்துச் செல்ல தேவையான முதலுதவி மற்றும் அவசர மருத்துவ உதவி வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும், ஆம்பு லன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டும் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வரவில்லை என்றும், இதற்கிடையே லாட்ஜின் வளாகத்தில் எடப்பாடி பழனி சாமிக்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை மற்றும் விஐபி வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்ததால் ஆம்பு லன்ஸ் வந்து செல்ல போதிய வழி வகை செய்யப்படவில்லை என்றும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற் றம் சாட்டியுள்ளனர்.காமராஜின் உறவி னர்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்ட தைத் தொடர்ந்து, அவர்கள் சம்பவ இடத் திற்கு வந்து அவரை மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காமராஜை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற் கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித் ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்தின் அவசர கால நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஒரு நபர் திடீரென மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டதா? அவசர மருத்துவ உதவிக்கு தகவல் தெரி விக்கப்பட்டதா? ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? ஓட்டலில் அவசரகால மருத்துவ உதவிக் கான ஏற்பாடுகள் இருந்தனவா? என்பது குறித்து அதிகாரிகள் விரிவான விசார ணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், விஐபி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக வாகனங் கள் நிறுத்தப் படும் போது, அவசர ஊர்தி கள் தடையின்றி செல்வதற்கான பாதை எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவது முக்கியமா அல்லது விஐபி வாகனங்களு க்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமா என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது இது போன்ற சூழ்நிலை களில் காவல்  துறையினருக்கு முறை யான அவசரகால போக்குவரத்து மேலா ண்மை பயிற்சி வழங்கப்பட வேண்டுமா என்பதையும் அரசு பரிசீலிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள் ளனர் ஓட்டல் நிர்வாகத்தின் மீது விசார ணை நடத்த கோரிக்கை  சம்பவத்தின் போது ஓட்டல் நிர்வாகத்தினர் உடனடி யாக மருத்துவ உதவி செய்யாமல் அலட் சியமாக செயல்பட்டதாகவும், சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் உறவி னர்கள் தரப்பில் குற்றச்சாட்டு தெரிவிக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் மற்றும் சம்பவ நேரத்தில் பணியில் இருந்த ஊழியர்களிடம் விசார ணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மேலும், ஓட்டல் உரிமையா ளர் வெங்கடசுப்பு தொடர்பாகவும் பல் வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ள நிலையில், சம்பவத்திற்குப் பின்னர் அவர் தலை மறைவாகியுள்ள தாக கூறப்படுகிறது. இந்த தகவல் குறித்தும் காவல்துறை அதிகாரப் பூர் வமாக விசாரித்து உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓட்டலுக்கு அனுமதிகள் உள்ளதா? அரசு ஆய்வு செய்ய வேண்டும் நட்சத்திர ஓட்ட லாக செயல்பட்டு வரும் இந்த கட்டிடத் திற்கு கட்டிட அனுமதி, தீயணைப்புத் துறை தடையில்லா சான்று, பேரிடர் மேலாண்மை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள், மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளின் உரிய அனுமதிகள் பெறப் பட்டுள்ளனவா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.குறிப்பாக, ஓட்டலில் அவசரகால வெளியேற்றப் பாதைகள், தீயணைப்பு பாதுகாப்பு வசதிகள், லிப்ட் பாதுகாப்பு, அவசர மின் சாரம், முதலுதவி பெட்டி, பயிற்சி பெற்ற பணியாளர்கள், ஆம்புலன்ஸ் அணுகும் வசதி உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக உள்ளனவா என் பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை  உயிரி ழந்த காமராஜுக்கு மனைவி இந்துமதி மற்றும் கிரி பிரசாத், ஆதித்யா ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளதாக உறவி னர்கள் தெரிவித்துள்ளனர். குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும், சம்பவத்தில் அலட்சியம் அல்லது விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒரு அரசியல்தலைவரை சந்திக்க வந்த தொண்டர், கூட்ட நெரிசலு க்கு மத்தியில் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில், மனித உயிருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள் ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் சம்பந் தப்பட்ட துறைகள் முழுமையான விசார ணை நடத்தி உண்மை நிலையை வெளிப் படுத்துவதுடன், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக் கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளதாக என  பொதுமக்கள் தெரிவித்தனர் 

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad