தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவ மனையில் ரூ.1.75 கோடியில் பாதுகாப்புப் பெட்டகம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவ மனையில் ரூ.1.75 கோடியில் பாதுகாப்புப் பெட்டகம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு !

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ்  அரசு மருத்துவ மனையில் ரூ.1.75 கோடியில் பாதுகாப்புப் பெட்டகம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு !
குடியாத்தம் , செப்டம்பர் 1 -
       வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் தங்க மோதிரங்களை பாதுகாக்கும் பணியை கலெக்டர் ஆய்வு குடியாத்தம் அரசு மாவ ட்ட தலைமை மருத்துவமனையில் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள தங்க மோதிரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ரூ.1.75 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பாதுகாப்புப் பெட்டக பணிகளை வேலூர் மாவட்ட கலெக்டர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பாதுகாப்புப் பெட்டகத்தின்கட்டு மான பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறி த்து அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந் தார்.ஆய்வின்போது மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் விஜய் சந்திரன், பொது ப்பணித்துறை செயற்பொறியாளர் இ.இம்மானுவேல் ஜெய்கர், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், வட்டாட்சியர் பிரியா உள்ளிட்ட அதிகாரி கள் உடனிருந்தனர்.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad