ஆம்பூர் அருகே மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்த இளைஞர் கைது !
வாணியம்பாடி, ஆகஸ்ட் 22-
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சாத்தம்பாக்கம் பகுதியில், மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக உமராபாத் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தினேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான மளி கை கடையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மளிகை கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், 9 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் 1 கிலோ கூலிப் பாக்கெட்டுகள் என மொத் தம் 10 கிலோ தடை செய்யப்பட்டபோதைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.இதனை தொடர்ந்து தினேஷ்குமாரை உமராபாத் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப் பட்டார். தடை செய்யப்பட்ட போதைப் பொ ருட்கள் விற்பனையை தடுக்க காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக