தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டினத்தில் மாவட்ட அளவிலான டேக் வெண்டா போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 9 குறு வட்டங்களில் ஏற்கனவே நடத்தப்பட்ட இணை போட்டிகளில் வெற்றி பெற்ற 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பங்கேற்றனர்.
இந்தப் போட்டி நடைபெறும் போது முறையாக நடுவர்களை பணியமர்த்தாமல் பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோரை நடுவராக வைத்தும், பயிற்சி பெறாத மாவட்ட அளவிலான உடற்கல்வி ஆசிரியர்களையும் நடுவராக பணியமர்த்தி ஒருதலை பட்சமாக வெற்றி நிர்ணயிக்கப்பட்ட தாக குற்றம்சாட்டி போட்டியில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.
எனவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, உரிய விசாரணை நடத்தி மீண்டும் அதே போட்டிகளை, திரும்ப நடத்த வேண்டுமென போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் தேக்வாண்டா பயிற்சியாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக