விஐடி பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா டெல்லி முதல்வர் ரேகா குப்த பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

விஐடி பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா டெல்லி முதல்வர் ரேகா குப்த பங்கேற்பு !

 விஐடி பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா  டெல்லி முதல்வர் ரேகா குப்த பங்கேற்பு ! 

காட்பாடி, ஆகஸ்ட்  22 -

           வேலூர் மாவட்டம், காட்பாடி விஐடி பல்கலைக் கழகத்தில் இந்தியாவில்  நீங்கள் ஏ.ஐ தொழில்நுட்பத்தைபயன்படுத்து பவர்களாக மட்டும் இருக்க கூடாது    ஏ.ஐ தொழில் நுட்பத் தால் நாட்டை கட்டமைப்பவர் களாகவும் புதிய கண்டுபிடிப்பு களை உருவாக்குபவர்களாகவும் நீங்கள் இருக்க வேண்டும் - உள் நாட்டு தயாரிப்புகளே பயன் படுத்த வேண்டும் நமது நாட்டி லேயே தொழில்முதலீடுகளை செய்ய வேண்டும் அப்போது தான் பிரதமர் சொன்னதை போல் 2047 இந்திய  வ்ல்லரசாக அனைத்திலும் வளர்ந்த நாடாகும் - வி.ஐடி பல்கலைக் கழகத்தில் பட்டங்களை வழங்கி  டெல்லி முதல்வர். ரேகா குப்தா பேச்சு - பல மாநிலங்களில் காலியாக உள்ள பல்கலைக் கழக துணை வேந்தர்களை நியமிக்க புதிய மத்திய கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி விஸ்வநாதன் பேச்சு!

வேலூர் மாவட்டம்,காட்பாடியில் உள்ள வி.ஐடி வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் 41 ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது இதில் பல்கலைக்கழக துணை தலைவர்கள் சேகர்.,சங்கர்,செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் இவ்விழாவில் கௌரவ விருந்தினராக டாடா நிறுவனத் தின் துணை தலைவர் பாபு உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக டெல்லி முதல்வர் ரேகா குப்தா கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார் இந்த பட்டமளிப்பு விழாவில் இளங்கலை மற்றும் முதுகலை என மொத்தம் 11276 பேரும் முனைவர் பட்டங்களை 785 பேரும், பெற்றனர் 84 முதலிடம் பிடித்து தங்கப்பதக்கங்களை பெற்றனர் இவ்விழாவில் பட்டங்களை வழங்கிய பின்னர் டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேசுகையில்  இன்று பட்டங்களை பெற்ற பின்னர் நீங்கள் மேற்கொண்டு பணிகளுக்கோ அல்லது ஆராய்ச்சி கல்விக்கோ செல்வீர்கள் மாணவர்களின் பங்களிப்பு என்பது இன்றியமையாத ஒன்று டெல்லியில் சுற்றுசூழல் மாசு பிரச்சணை உள்ளிட்ட வைகளுக்கு காற்றுமாசு பிரச்சணைக்கும் மாணவர்களின் மூலம் ஆராய்ச்சிகள் மூலம் தீர்வு கண்டுள்ளோம் உங்களின் கண்டுபிடிப்புகளுக்கான தொழில்நுட்பங் கள் வளர்ந்து வருகிறது அதிலும் ஏ.ஐ எனப்படும் ஆர்டிபிஷியல் இண்டலி ஜெண்ட் முக்கிய பங்காற்றுகிறது இந்தியா ஏ.ஐ நீங்கள் பயன்படுத்து பவர் களாக மட்டுமல்லாமல் ஏ.ஐ மூலம் இந்தியாவை பெரிய அளவில் கட்டமைப் பவர்களாக இருக்க வேண்டும்  நமது பிரதமர் மோடி கூறியதை போல் 2047 ஆம் ஆண்டு வல்லரசாகவும் வளர்ந்து நாடாக வும் வளர  நீங்கள் மாணவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது  ஆகவே நீங்கள் நமது நாட்டு உற்பத்தி பொருட்களையே வாங்குகள் நமது நாட்டிலேயே முதலீடு செய்யுங்கள் என பேசினார் 

     முன்னதாக வி.ஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் பேசுகையில் தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளது இதே போல் கேரளா போன்ற பிறமாநிலங்களிலும் பல்கலைக்கழக துணை வேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளது இதனால் உயர் கல்வி பாதிக்கபடுகிறது ஆகவே புதிய மத்திய கல்வி அமைச்சர் அந்தந்த மாநில அரசுகளுடன் பேசி பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமனம் செய்ய வேண்டுமென பேசினார் 

    இந்த பட்டமளிப்பு விழாவில் திரளான மாணவ,மாணவிகளும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad