ராணிப்பேட்டை வாலாஜா நகர ஏ டி எம் செக்யூரிட்டி களுடன் காவல் ஆய்வாளர் ஆலோசனை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

ராணிப்பேட்டை வாலாஜா நகர ஏ டி எம் செக்யூரிட்டி களுடன் காவல் ஆய்வாளர் ஆலோசனை !

ராணிப்பேட்டை வாலாஜா நகர ஏ டி எம் செக்யூரிட்டி களுடன் காவல் ஆய்வாளர் ஆலோசனை !
ராணிப்பேட்டை ,ஆகஸ்ட் 
        ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா
 பேட்டை காவல் நிலைய எல்லைக்குட் பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு ஏடிஎம் மையங் களின் பாதுகாவலர்களுக்கான கலந் தாய்வுக் கூட்டம் வாலாஜா டி2 காவல் 
நிலையம் காவல் ஆய்வாளர் சக்தி கணேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ஏடிஎம் மையங்களில் 
திருட்டு மற்றும் பிற குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது தொடர்பாக 
பாதுகாவலர்களுக்கு காவல் ஆய்வாளர் சக்தி கணேஷ் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். ஏடிஎம் மையங்களில் சந்தே கத்திற் கிடமான நபர்களின் நடமாட்டம், 
சந்தேகமான செயல்பாடுகள் குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் 
அறிவுறுத்தப்பட்டது  மேலும் ,ஏடிஎம் மை யங்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, குற்றச்சம்பவங்களைத் தடுக் கும் வகையில் விழிப்புடன்  பணியாற்று மாறு பாதுகாவலர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினார் .

ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே‌. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad