தமிழர் வாழ்வியலும் ஆரோக்கியமும் – மேச்சேரி காவிரி கல்லூரியில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

தமிழர் வாழ்வியலும் ஆரோக்கியமும் – மேச்சேரி காவிரி கல்லூரியில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.


மேச்சேரி, ஆகஸ்ட் 28:
 


மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் “தமிழர் வாழ்வியலும் ஆரோக்கியமும்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் தமிழ்த்துறை தலைவர் முனைவர் கவிதா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் செல்வகுமார் தலைமையுரையாற்றினார். அப்போது இயற்கை மருத்துவத்தின் அவசியம் மற்றும் மரக்கன்றுகள் நடுவதன் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், கவிஞர் நாகராஜ், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

தமிழ் இலக்கியத்துடன் இணைந்த ஆரோக்கிய வாழ்வியல்

சிறப்பு விருந்தினராக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயற்கை மருத்துவர் மரு. கோ. முனுசாமி கலந்து கொண்டு, “தமிழர் வாழ்வியலும் ஆரோக்கியமும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நோய் பரவும் தன்மையை குறைப்பதற்கான வழிமுறைகளை தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள வாழ்வியல் கருத்துகளுடன் ஒப்பிட்டு விளக்கிய அவர், மனிதர்களின் உடல் மற்றும் மனநலத்தை பாதுகாக்க இயற்கை முறையில் வாழ்வதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.


மேலும், இயற்கை முத்துக்குமார் யோகாவின் நன்மைகள், மரங்களை வளர்ப்பதன் அவசியம் மற்றும் நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டைத் தடுப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த சூழலை உருவாக்குவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியில் காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவத் தலைவர் நடேசன், தலைவர் அன்பழகன், செயலாளர் பேராசிரியர் இளங்கோவன், தாளாளர் இராமநாதன், துணைத்தலைவர் மதன் கார்த்திக், இணைச்செயலாளர் ஹரிசங்கர், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், மாணவர் சேர்க்கையின் புல முதன்மையர் பேராசிரியர் நந்தகுமார், அனைத்துத் துறைத்தலைவர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கவிதா நன்றியுரையாற்றினார்.


தமிழர் பாரம்பரிய வாழ்வியல், இயற்கை மருத்துவம், உடல் மற்றும் மனநலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய இக்கருத்தரங்கம் பயனுள்ளதாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad