ஹோட்டலில் சாப்பிடச் சென்ற விவசாயி ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த ஹோட்டல் நிர்வாகி மீது வழக்குப் பதிவு!
காட்பாடி,ஆகஸட் 28 -
வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள அனுசுயா அறுசுவை அசைவ விருந்து ஹோட்டலில் கடந்த 25/8/2026 அன்று மதியம் பழைய காட்பாடி பெரு மாள் கோயில் தெருவைச் சேர்ந்த முனு சாமி என்பவர் அவரது உறவினர் ஒருவரு டன் உணவருந்தச் சென்றுள்ளார். அங்கு சாப்பிட பரோட்டோ, ஆம்லெட் மற்றும் சிக்கன் பக்கோடா ஆர்டர் செய்துள்ளார். பரோட்டோவும், ஆம்லெட் மட்டும் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது. சாப்பிட்டு முடித்த வுடன் சிக்கன் பக்கோடா கொடுக்கப்பட்ட தாக கூறப்படுகிறது. அதற்கு முனுசாமி சாப்பிட்டு முடித்தவுடன் பக்கோடா கொடு த்தால் எப்படி சாப்பிட முடியும் என்றும், சாப்பிடும் போது கொடுத்திருக்கக் கூடாதா? என்றும் ஹோட்டல் நிர்வாகியி டம் கேட்டுள்ளார். இதனை கேட்ட ஹோட் டல் நிர்வாகி இதை பார்சல் வாங்கிட்டு போடா என்று தடித்த வார்த்தைகளால் கூறி திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஹோட்டல் நிர்வாகிக்கும் முனுசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை ஏற்பட்டுள்ளது இதை யடுத்து ஹோட்டல் நிர்வாகி முனுசாமி யை ஆபாச வார்தைகளால் திட்டியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளளார். நீ ஒரு பிச்சைக்காரன் உன்னால் இதை வாங்க முடியாது, நீ இங்கிருந்து மரி யாதையா போடா, இல்லன்னா அறுத்து போட்டு விடு வேன் என மிரட்டி உள்ளார். இதனை கேட்ட முனுசாமி உங்கள நான் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இதை கூறியவு டன் காவல் துறையையும், நீதி துறையை யும் ஆபாசமாக திட்டியுள்ளார் ஹோட்டல் நிர்வாகி. எனவே இது குறித்து காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. மேலும் இது குறித்து காட்பாடி போலீசார் ஹோட்டல் நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக