சேத்தியாத்தோப்பு அருகே சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாப பலி
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஆனைவாரி கிராம பகுதியில் நான்கு வழிச்சாலையில் பல்கர் கனரக வாகனம் மோதியதில் பல்சர் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுபக் கண்ணன் (19), வினோத் (18), சூர்யா (19) ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய கனரக வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரே நேரத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக