98ம் ஆண்டு பெருவிழா திருப்பலியில்
ஆயர் ஸ்டீபன் அந்தோணி சிறப்பு நற்செய்தியை வழங்கினார்
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு
தூத்துக்குடி மறை மாவட்டம் ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புத கெபி திருத்தலத்தின் 98ம் ஆண்டு பெருவிழா கடந்த வாரம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் சிறப்பு திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்து வந்தது. 9ம் நாளான நேற்று மாலை 6.15 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி மறையுரை வழங்கினார். தொடர்ந்து மின்விளக்கு அலங்காரத்தில் சப்பர பவனி நடைபெற்றது.
இன்று காலை பெருவிழா திருப்பலி தூத்துக்குடி மறை மாவட்ட மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்றது. ஆயர் ஸ்டீபன் அந்தோணி சிறப்பு நற்செய்தியை வழங்கினார். விழாவில் புதிதாக 29 குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கப்பட்டது.
புதிதாக புது நன்மை பெற்ற குழந்தைகளுக்கு ஆயர் ஸ்டீபன் அந்தோணி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ , மாணவியர்களுக்கு தங்க நாணயம், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்குத்தந்தை சூசை ரத்தினம், திருத்தல நிதி குழுவினர் பங்கு இறை மக்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இன்று மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக