மலைப்பாதை வழியாக வரும் கனரக வாகனங்கள் விபத்திலிருந்து தடுக்க ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் குடிநீர், தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கல் !
வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு மலைப் பாதை வழியாக வரும் கனரக வாகனங்கள் விபத்திலிருந்து தடுக்க ஓட்டுனர்களுக்கு வேலூர் மாவட்டம் அனைத்து எல்லைகளிலும் சிறப்பு பணி களாக பேரணாம்பட்டில் குடிநீர், தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கி உதவிய காவல் துறை சார்பில் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்து வருகின்றனர் காவல் துறை யினர் விபத்துகளை தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு வேலூர் மாவட்டம், பேர் ணாம்பட்டு தாலுகா, பேரணாம்பட்டு அடுத்துள்ள பத்தலப்பல்லி கிராமத்திலி ருந்து சுமார் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு வனப்பகுதியை ஒட்டி மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதையில் சுமார் ஏழு கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. பத்தலப்பல்லி மலைப்பாதையா னது ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங் களுக்கு செல்லும் முக்கிய சாலையாக அமைந்துள்ளது.இந்த மலைப்பாதை வழி யாக நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு இரவு நேரங்களில் செல்கின்றன. அது மட்டு மின்றி, மும்பை, கொல்கத்தா, ராஜஸ் தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்களில் பல்வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு வரும் லோடு வாகனங்கள் ஓட்டிகள், மலைப் பாதை வழியாக செல்கின்றனர்
இதனால் இரவு நேரங்களில் நீண்ட தூரம் வாகனங் களை இயக்கி வரும் ஓட்டுநர் கள் தூக்கக் கலக்கத்திற்கு ஆளாகி, அவ் வப்போது மலைப்பாதையில் விபத்துக் கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த விபத் துக்களால் தமிழகத்தில் இருந்து ஆந்திரா மற்றும் கர்நாடகா செல்லும் வாகனங்க ளும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநி லங்க ளில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாக னங்களும் பாதிக்கப்பட்டு, போக்கு வரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. மலைப் பாதையில் விபத்துக்கள் ஏற்பட்டு வரு வதால், வாகன ஓட்டிகளிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணாம் பட்டு காவல் ஆய்வாளர் பிரபு தலைமை யில், காவல்துறை அதிகாரி ஏ.எஸ்.பி. தனுஷ்குமார் மற்றும் குடியாத் தம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஹேமா ஆகியோருடன், காவல்துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் இரவு நேரங்களில் மலைப்பாதை வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு குடிநீர், தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கி உதவி மகிழ்ச்சி யோடு உரையாடல் நடத்தி வாகன ஓட்டி களுக்கு தூக்கம் வராத அளவிற்கு விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும், ஒலிபெருக்கி மூலம் மலைப் பாதை வழியாக வரும் வாகன ஓட்டிகளு க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்ற னர். மலைப்பாதையில் வாகனங்களை கவனமாகவும், பாதுகாப்பாகவும் இயக்க வேண்டும் என்றும், தூக்கக் கலக்கத்து டன் வாகனங்களை இயக்காமல் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் பயணிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக