ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக் குறை மற்றும் அடிப் படை வசதிகளை செய்து தர கோரி போராட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக் குறை மற்றும் அடிப் படை வசதிகளை செய்து தர கோரி போராட்டம் !

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக் குறை மற்றும் அடிப் படை வசதிகளை செய்து தர கோரி  போராட்டம் !
குடியாத்தம் ,ஆகஸ்ட் 29 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதி களை செய்து தர கோரி சுமார் 3 மணி நேரமாக பள்ளிக்குள் மாணவர்களை அனுப்பாமல் வெளியே அமர வைத்து படிக்க வைத்து வரும் பெற்றோர்கள். 
அதிகாரிகள் பேச்சுவார்த்தை வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் மேல் பட்டி அடுத்த கிருஷ்ணம்பல்லி  கிராமத் தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி யில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை  சுமார் 17 மாணவர்கள் படித்து வருகின்ற னர் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரி யர் மட்டுமே இருப்பதாகவும் இந்தப் பகுதி யில் உள்ள பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியரிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் கூடுதலாக பெண் ஆசிரியர் வேண்டு மென்றும் மற்றும் ஸ்மார்ட் வகுப்புகள் வேண்டும் பள்ளிக்கு சுற்றுச்சுவர்  வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து தர வேண்டுமென பல முறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் பள்ளிக்கு வரும் ஆசிரியர் சரியான நேரத்திற்கு வருவதில்லை காலதாமத மாக வருவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர் ஊராட்சி ஒன்றிய தொ டக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்க ளின் தரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் இதனால் இன்று மாணவர்களை பள்ளிக்கு அனுப் பாமல் பெற்றோர்களுடன் மாணவர்களை அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகி ன்றனர் சுமார் 3 மணி நேரமாகபள்ளியில் வெளியே அமர வைத்து பெற்றோர்கள் மாணவர்களை படிக்க வைத்து வருவது பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது தகவல் அறிந்து வந்த மேல் பட்டி காவல்துறையினர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பெற்றோர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் மாணவர்களை  பள்ளிக்குள்அனுப்பி வைத்தனர் இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad