நெமிலி பிடிஓ அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற மாதாந்திர கவுன்சில் கூட்டம் !
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 10 -
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பி டி ஓ அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாதாந்திர சாதாரண கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு யூனி யன் சேர்மன் வடிவேல் தலைமை வகித் தார். பிடிஓ சத்யாமுன்னிலை வகித்தார். பிடிஓ சுமதி வரவேற்றார். அப்போது அந் தந்த பகுதியை சேர்ந்த யூனியன் கவுன் சிலர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
சுகுமார் (அதிமுக) திருமால்பூர் கிராமத் தில் ஆர்ஓ வாட்டர் பிளாண்ட் அமைக்க வும், ஆதிதிராவிடர் காலனி, பள்ள தெரு உள்ளிட்ட இடங்களில் சிமென்ட் ரோடு அமைக்கவும் கடந்த ஒரு ஆண்டு கால மாக கோரிக்கை வைத்து வருகின்றேன். இது குறித்து பல கூட்டங்களில் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது.அப்படி இருந்தும் பிடிஓ உள்ளிட்ட அதிகாரிகள் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.சத்யா (பிடிஓ): இது குறித்து திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு திட்ட இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளது.சுகுமார்: இந்த பதி லை தான் தொடர்ந்து கூறி வருகின்றிர் கள்.உங்களுக்கு இந்த பணியை செய்ய ஆர்வம் இருந்தால் செய்யுங்கள். இல்லை என்றால் இங்கிருந்து டிரான்ஸ்பர் வாங்கி கொண்டு சென்று விடுங்கள் என்று ஆவேசமாக பேசினார்.விநாயகம் (திமுக): எங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை என கூறி ஆர்ஓ வாட்டர் அமைக்க பலமுறை எடுத்து கூறியும், பிடிஓ கண்டுகொள்ளவில்லை. இந்த பணிகளை உங்களால் செய்ய முடியவில் லை என்றால் வெளிப்படையாக கூறி விடுங்கள். இந்த அத்தியாவசிய பணி களுக்கு ஏன் டெண்டர் வைக்க காலம் தாழ்த்துக்கின்றீர்கள். பணிகளை செய்ய முடியவில்லை என்றால் வேறு அலுவல கத்துக்கு சென்றுவிடுங்கள். இல்லை என்றால் நான் எனது பதவியை ராஜி னாமா செய்து விடுகிறேன் என்று பேசினார்.ஆருண் (சுயேட்சை) : துறையூர் பகுதியில் சாலை அமைக்க வேண்டி பல முறை கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை பிடிஓ டெண்டர் வைக்கவில்லை. டெண்டர் வைக்க கூடாது என உங்களை நிர்பந்தம் செய்பவர் யார் என கூறுங்கள் என்று ஆவேசமாக பேசினார்.பிடிஓ : இன்னும் ஒரு வார காலத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்து டெண்டர் வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். இதை தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட யூனியன் கவுன்சிலர்கள் கிருஷ்ணவேனி முருகேசன் உள்ளிட்ட பலர் எழுந்து நின்று பிடிஓ அலுவலகத்தில் பிடிஓ உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகளை மதிப்பதில்லை என கூச்சலிட்டனர் பின்னர் பிடிஓ சத்யா கூட்டம் முடிவதற்கு முன்னரே தனக்கு கலெக்டர் அலுவலக்த தில் மீட்டிங் உள்ளது என்று கூறி எழுந்து செல்ல முயன்றார். அப்போது சேர்மன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து இப்படி பாதியில் எழுந்து செல்கிறிர்களே என கூச்சலிட்ட போது மீண்டும் அவரது இருக்கையில் அமர்ந்து கூட்டத்தை நடத்தி முடித்தார்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக