தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி மைய நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் !
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.08.2026) வேலூர் மாவட்ட தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி மைய நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, போட்டித் தேர்வில் வெற்றிபெற ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது வேலூர் வட்டாட்சியர் பழனி, கண்காணிப் பாளர் திரு.சிவக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக