குமரியில் முறையான பதிவு எண் இல்லாத வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 ஆகஸ்ட், 2026

குமரியில் முறையான பதிவு எண் இல்லாத வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை.

குமரியில் சரியான பதிவு எண் இல்லாத வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை.

விபத்தில்லா குமரி என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஸ்டாலின் சாலை விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் இருசக்கர வாகனங்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவின் படி கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் நடத்திய வாகன சோதனையில், 
சரியான பதிவு எண் இல்லாதது
ஓட்டுநர் உரிமம் இல்லாதது,
விதிகளுக்குப் புறம்பாக ஆல்டரேஷன் 
செய்யப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

விதிமீறலில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கும் ₹20,000 அபராதம் விதிக்கப்பட்டு, போக்குவரத்து போலீசாரால் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட நிருபர்.நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad