நாகர்கோவில் பீச்ரோடு பகுதியை சேர்ந்த தவெக பிரமுகர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 ஆகஸ்ட், 2026

நாகர்கோவில் பீச்ரோடு பகுதியை சேர்ந்த தவெக பிரமுகர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள கோரிக்கை.

நாகர்கோவில் பீச்ரோடு பகுதியை சேர்ந்த சமூக சேவகர் மற்றும் தவெக பிரமுகர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வைத்தியநாதபுரம் சிஎஸ்ஐ தேவாலயம் முன்பு மேற்கூறையுடன் பல ஆண்டுகளாக இருந்த பேருந்து நிறுத்தம் (அதாவது பஸ் ஸ்டாப்) திடீரென இரவோடு இரவாக நாகர்கோவில் மாநகராட்சி மூலம் அகற்ற பட்டுள்ளது. 

மேலும் இப் பேருந்து நிறுத்தம் மூலம் இதனை சுற்றியுள்ள பீச்ரோடு, வைத்தியநாதபுரம், பெரியவிளை, வடலிவிளை வயல் தெரு, பாவலர் காலணி, இந்து கல்லூரி போன்ற பகுதிகளில் இருந்து வரும் பொது மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இப்பேருந்து நிறுத்தம் வந்து தான் பல்வேறு ஊர்களுக்கு செல்ல முடியும்.  

தற்போது பேருந்து நிறுத்தம் அகற்ற பட்ட காரணத்தால் மழை காலத்தில் எந்த ஒரு இடத்திலும் ஒதுங்கி நிற்க முடியாது.மேலும் தினந்தோறும் பொது மக்கள் பேருந்து ஏறுவதற்கு மதிய வேளைகளில் வருபவர்கள் அந்த இடத்தில் எங்கும் ஒதுங்கி நிற்க முடியாது 

அதனால் பொது மக்கள் மற்றும் முதியவர்கள், சின்ன சிறு பிள்ளைகள் வெயிலின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் சோர்வு அடைந்து தலை சுற்றி கீழே தரையில் அமர்வது அன்றாடம் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

எனவே பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் வைத்தியநாதபுரம் சிஎஸ்ஐ தேவாலயம் முன்பு செயல் பாட்டில் இருந்து வந்த பேருந்து நிறுத்தம் இருந்த அதே இடத்தில் மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நலன் கருதி கேட்டுக் கொண்டார்.

தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad