கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் பேரூர் தி.மு.க சார்பில் பேரறிஞர் பெருந் தகை அண்ணா 118 வது பிறந்தநாள் விழா !
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.கழகம் சார்பில், உலக அரசி யலில் வியக்கத்தக்கதோர் அதிசய மா மேதை - தமிழ்த்தாயின் தலைமகன் - பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர் களின் 118-வது பிறந்தநாள்விழா நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், வடிவேலு அவர் கள் தலைமையிலும், நெமிலி பேரூர்கழக செயலாளர் ஜனார்த்தனன் அவர்கள் முன்னிலையிலும் சிறப்பாக கொண்டா டப்பட்டது.
பிறந்தநாள் விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நெமிலி அண்ணா சாலையில் அமைதி ஊர்வலமாகச் சென்று, நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவச் சிலை க்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, பேரறி ஞர் அண்ணா அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் பொதுமக்களுக்குஇனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், நெமிலி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய துணைச் செயலாளர் முகமது அப்துல் ரகுமான், பாண்டியன், பாரதி , மாவட்ட பிரதிநிதி அரிகிருஷ்ணன், நெமிலி பேரூர் நிர்வாகிகள் சேகர், கோபி, ஹரிஷ் உள்ளிட்ட நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு, பிறந்தநாள் விழாவினை சிறப்பித்தனர்.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக