பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு திமுகவினர் சார்பில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஜி.ஆர். வசந்தவேல் தலைமை வகித்தார். அவர் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்களுக்கு திமுகவினர் இனிப்புகள் வழங்கினர். பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அண்ணாவின் சமூகநீதி, சமத்துவம், மொழிப்பற்று உள்ளிட்ட கொள்கைகளை நினைவுகூர்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டேனியல் ராஜ், நகர மன்ற உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக