குலசை கடலில் சிலைகள் விஜர்சனம், விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் 17வது ஆண்டாக உடன்குடி பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இன்று செவ்வாய்க்கிழமை மாலை சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. உடன்குடி ராமகிருஷ்ணா பள்ளி முன்பு இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வேலுபாண்டி தலைமை வைத்தார்.
மாவட்ட தலைவர் செல்லத்துரை பாண்டியன், செட்டியாபத்து கணேசன் முன்னிலை வகித்தனர். இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஓம் கார் பாலாஜி கொடி அசைத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மழவை செந்தில் , நிர்வாகிகள் முத்துக்குமார், தினகரன், பொன் பாண்டியன், சதீஷ்குமார், சின்னத்துரை, கணேசன், சக்திவேல், முருகன் மணி முருகன் ராம்குமார் தங்கை இசக்கி செல்வகுமார் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேளதாளங்கள் முழங்க உடன்குடி நகர வீதியில் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குலசேகரப்பட்டினம் கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட்டது.
மொத்தம் 27 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டனர். ஊர்வலத்தையொட்டி டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக