சமூக நீதி மாணவியர் விடுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா திடீர் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

சமூக நீதி மாணவியர் விடுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா திடீர் ஆய்வு.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் செயல்பட்டு வரும் சமூக நீதி மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இ. பத்மஜா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது விடுதியில் மாணவியர்களுக்காக தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவை மாவட்ட ஆட்சியர் பத்மஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவியர்களுக்கு வழங்குவதற்காக சமைக்கப்பட்டிருந்த உணவை தானும் சாப்பிட்டு ருசித்துப் பார்த்து, உணவின் தரம் மற்றும் சுவையை ஆய்வு செய்தார்.

மேலும், விடுதியில் தங்கியுள்ள மாணவியர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள உணவு வகைகள் மற்றும் சத்தான உணவுகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

குறிப்பாக, மாணவியர்களுக்கு முட்டைகள் முறையாக வழங்கப்படுகிறதா என சமையலரிடம் மாவட்ட ஆட்சியர் பத்மஜா நேரில் கேட்டறிந்தார். உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், சமையலறையின் சுகாதாரம் உள்ளிட்ட விடுதியின் அடிப்படை வசதிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

மாணவியர்களுக்கு தரமான மற்றும் சத்தான உணவு தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், விடுதி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad