நெல்லையில் என்எஃப்சி பிரைவேட் லிமிடெட் சார்பில் என்எஃப்சி விருதுகள் 2026 வழங்கும் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 செப்டம்பர், 2026

நெல்லையில் என்எஃப்சி பிரைவேட் லிமிடெட் சார்பில் என்எஃப்சி விருதுகள் 2026 வழங்கும் விழா.

என்எஃப்சி விருதுகள் 2026 விழா 

நெல்லையில் என்எஃப்சி பிரைவேட் லிமிடெட் சார்பில் என்எஃப்சி விருதுகள் 2026 வழங்கும் விழா நடைபெற்றது.

தொழில் துறையில் சிறந்து விளங்கும் சாதனையாளர்கள் மற்றும் தொழில் முனைவோரின் திறமைகளை அங்கீகரிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, திருநெல்வேலி காவல் துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு, ஐ.பி.எஸ்., தலைமை வகித்தார்.

விழாவில் சிறந்த தொழில் முனைவோருக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

செய்யது குழும நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் டி.இ.எஸ். பாத்து ரப்பானி, முன்னோடி ஆசியா குழுமம் மற்றும் ஸ்டாண்டர்டு ஃபயர்வொர்க்ஸ் நிறுவன இயக்குநர் ரத்தினம் சங்கரலிங்கம் மகேஸ்வரன், பெல் பின்ஸ் குழும நிர்வாகப் பங்குதாரரும் திருநெல்வேலி மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் சங்கத் தலைவருமான குணசிங் செல்லதுரை, கிராண்ட் ராயல் டூர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ். சரவணன் மற்றும் இந்தியாவின் “மர மனிதர்” என்று போற்றப்படும் எம். யோகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும், தமிழ்த் திரைப்பட நடிகர்கள் விக்ராந்த் மற்றும் எஸ்.பி.சித்தார்த் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு கவுரவிக்கப்பட்டனர்.

சிறப்பு கௌரவ விருந்தினர்களாக அருணா கார்டியாக் கேர் நிறுவனத்தின் மூத்த இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் அருணாசலம், நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்வர்ணலதா அருணாசலம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் செயல் துணைத் தலைவர் மற்றும் கிளை வங்கிப் பிரிவு தமிழ்நாடு தலைமை அதிகாரி பி.ஆர். அசோக் குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த என்எஃப்சி உறுப்பினர்கள் மற்றும் தொழில் முனைவோர் விழாவில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad