மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (21.09.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் !
வேலூர் , செப்டம்பர் 21
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (21.09.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. அவர்கள் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன். மாவட்ட ஆதிதிராவி டர் நலத்துறை அலுவலர் ராஜராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன். உதவி ஆணையர் (கலால்) குணசேகரன், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (நிலம்) அருண், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக