குடியாத்தம் வியாபாரிகள் சங்கத்தின் 48-வது ஆண்டு விழா! மற்றும் முப்பெரும் விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 செப்டம்பர், 2026

குடியாத்தம் வியாபாரிகள் சங்கத்தின் 48-வது ஆண்டு விழா! மற்றும் முப்பெரும் விழா !

குடியாத்தம் வியாபாரிகள் சங்கத்தின் 48-வது ஆண்டு விழா! மற்றும் முப்பெரும் விழா !
குடியாத்தம். செப்டம்பர்  7 - 
                  வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரிலுள்ள குடியாத்தம் வியாபாரிகள் சங்கத்தின் 48-வது ஆண்டு விழா கீழ் ஆலத்தூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரி யில் செப்.6 மாலை நடைபெற்றது அதில், குடியாத்தம் வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.அய்யாசாமி தலைமை தாங்கினார்
சங்கத்தின் கௌரவத் தலைவர்கள்.
எஸ்.நடராஜன்,பி.ரமேஷ்பாபு, கே.குபேந்திரன், து.தலைவர்கள். மாரி.சிவக்குமார்,
எம்.எஸ்.ஹரிகிருஷ்ணன், து.செயலாளர்.பி.குணமதி,சங்கஆலோசகர். என்.கிருஷ்ண மூர்த்தி,சட்ட ஆலோசகர்.சு.சம்பத் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சங்க செயலாளர். கே.கருணாகரன்,
வரவேற்புரை வழங்கினார்
வேலூர் மண்டல தலைவரும், மாவட்ட தலைவருமான  இரா.ப.ஞானவேலு, மா.து.  தலைவர். என்.இ.கிருஷ்ணன்,
வே.மா.செ.,ஏவிஎம்.குமார், மா.து.செ.,முல்லை சுந்தரேசன், மற்றும் மாவட்ட பொறுப் பாளர்கள் பலரும் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சி யின் சிறப்பு அழைப்பாளராக தமிழ் நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவரும், அனைத்திந்திய வணிகர் சம்மேளனத்தின் தேசிய துணைத்தலைவருமான  டாக்டர்.ஏ.எம்.விக்கிர மராஜா,கலந்துக்கொண்டு சிறப்பு ரையாற்றினார் அவர் பேசியதாவது,
"வியாபாரிகளை நசுக்கும் வகையில் பெருகி வரும் ஆன் லைன் வியாபாரம் மற்றும் கார்பரேட் நிறுவனங்களை ஒடுக்க வேண்டும் அதற்காக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாக வும், தீபாவளி விழாக் கால பட்டாசு வியாபாரிகளுக்கு அரசு முன்கூட்டியே லைசென்ஸ் வழங்க வேண்டும்!"- என்றும்
கேட்டுக்கொண்டவர்,அனைவரும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் விதத்தில் உணவு பழக்க வழக்கங்களும்,
தினமும் உடற்பயிற்சியும் நல்ல ஓய்வும் எடுத்தல் வேண்டும். அத்துடன் குடும்பத் தில் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் புரித லுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்!"-என்றும் சிறப்பான கருத்துரைகளை 
வழங்கினார்! அதனை தொடர்ந்து, சங்கத் தின் செயலாளர். கே.கருணாகரன் அவர் களை வேலூர் மாவட்ட துணைச் செயலா ளராக பதவி வழங்கி, பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினார்!  மேலும் ,சங்கத்தின் பேரவை மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத் துடன் வந்து விழாவை சிறப்பித்தனர்!
சங்க பொருளாளர். பி.என்.ஆர்.வரத
ராஜன் நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்!

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad