ரூ.65 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப் பட்டுள்ள கால் நடை மருந்தக கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 செப்டம்பர், 2026

ரூ.65 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப் பட்டுள்ள கால் நடை மருந்தக கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் !

 ரூ.65  இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கால் நடை மருந்தக கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் !
பேரணாம்பட்டு, செப்டம்பர் 9 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஏரிக் குத்தி கிராமத்தில்  கால் நடை மருந்தக கட்டிடத்தை திறந்து வைத்த கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி, அவர்கள் இன்று (09.09.2026) வேலூர் மாவட்டம், பேர்ணாம் பட்டு வட்டம். ஏரிக்குத்தி கிராமத்தில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. சட்டமன்ற உறுப்பி னர்கள் மரு.ம.சுதாகர் (காட்பாடி) மு.ம.வினோத் கண்ணன் (வேலூர்), க.சிந்து (குடியாத்தம்). பொதுப் பணித் துறை செயற்பொறியாளர்இம்மானுவேல் ஜெய்கர் உட்பட பொது மக்கள் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad