ரூ.133.23 இலட்சம் மதிப்பில் மாணவர்கள் தங்கும் விடுதியை குத்துவிளக் கேற்றி திறந்து வைத்த அமைச்சர் !
வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதி யில் அரசு தொழில் பயிற்சி நிலையத் தில் மறுசீரமைக்கப்பட்ட மாணவர்கள் தங்கும் விடுதியை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்த கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி, அவர்கள் இன்று (09.09.2026) வேலூர் மாவட்டம், அப்துல்லாபுரத்தில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.133.23 இலட்சம் மதிப் பில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட மாணவர் கள் தங்கும் விடுதியை குத்துவிளக் கேற்றி திறந்து வைத்தார். இந் நிகழ்வின் போது வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆப, சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலழகன் (அணைக் கட்டு), மு.ம.வினோத் கண்ணன் (வேலூர்), மரு.ம.சுதாகர் (காட்பாடி), ஏ.தென்றல் குமார்(கீ.வ.குப்பம்),க.சிந்து (குடியாத்தம்) பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் இம்மானுவேல் ஜெய்கர் உட்பட பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர்கள் கழக உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக