திருச்செந்தூரில் மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 செப்டம்பர், 2026

திருச்செந்தூரில் மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருச்செந்தூரில் மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் விடுதலைச்செழியன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு

திருச்செந்தூரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாகவும், பள்ளிக்கூடம், மருத்துவமனை, தொழில் நிறுவனங்களுக்கு அருகிலும் செயல்பட்டுவரும் திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் உள்ள மதுபான கடைகள், குலசேகரபட்டணம் சாலையில் உள்ள மதுபான கடை மற்றும் பார், பரமன்குறிச்சி சாலையில் உள்ள மதுபான கடை மற்றும் பார் ஆகியவற்றை உடனே அகற்றக்கோரி 

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன் வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மண்டல செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார், ஓட்டப்பிடாரம் தொகுதி மாவட்ட செயலாளர் சார்லஸ், மாவட்ட செய்தி தொடர்பாளர் வேம்படிமுத்து, மாவட்ட துணைச் செயலாளர் வெள்ளத்துரை, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வடிவேல் முத்து, 

திருச்செந்தூர் ஒன்றிய பொருளாளர் முத்துக்குமார், ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் கார்த்தி, வெங்கடேச பெருமாள், உடன்குடி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் முருகேசன், நகர செயலாளர்கள் திருச்செந்தூர் சரவணன், காயல்பட்டணம் முத்துராமன், ஆறுமுகநேரி லட்சுமணன், ஆத்தூர் சண்முகவேல், 

நகர துணைச் செயலாளர்கள் ஆறுமுகநேரி ஜெயலிங்கம், காயல்பட்டணம் பிரவீன், விவசாய தொழிலாளர் விடுதலை இயக்க மாவட்ட அமைப்பாளர் இளையராஜா, தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் லாசர், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்தகொண்டனர். 

ஆர்ப்பாட்டத்திற்கு பின் கலெக்டர் விஷு மகாஜனை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad