நாசரேத்தில் நவீன வசதிகளுடன் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி தொடக்க விழா கராத்தே டென்னிசன் தற்காப்புகளை பள்ளி சார்பாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருமறையூர் குருவானவர் திரு.ஜான் சாமுவேல் ஐயா அவர்கள் ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.
இந்த பள்ளியில் கிராமப்புற மாணவர்கள் நவீன வசதியுடன் பயிற்சி பெற விளையாட்டுப் பொருள்கள் கூடிய தற்காப்பு பள்ளி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு அகிலன், சரவணன், ரவி, சௌந்தர பாண்டியன், முருகேசன், விவின், டேனியல், அருள், ஈசாக்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்
ஏற்பாட்டுகளை தற்காப்பு கலைப்பள்ளி மாஸ்டர் டென்னிசன் செய்திருந்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக