தி பிரிட்ஜ் டிரஸ்ட் மற்றும் ஆக்ஸிலியம் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் உலக சாதனை நிகழ்வு!
வேலூர் மாவட்டம் காட்பாடி தி பிரிட்ஜ் டிரஸ்ட் (The Bridge Trust) தனது 31-வது உலக சாதனை நிகழ்ச்சியாக, வேலூர் ஆக்ஸிலியம் கல்லூரியுடன் (Auxilium College) இணைந்து '1 டன் நெகிழி (பிளா ஸ்டிக்) கழிவுகள் சேகரிப்பு' விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்க விழாவை செப் டம்பர் 2, 2026 அன்று கல்லூரி வளாகத் தில் மிகச் சிறப்பாக நடத்தியது. தமிழ் நாடு முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்கும் இந்த மாபெரும் முயற்சியின் முக்கிய நோக்கம் - நெகிழிப் பயன்பாட் டைத் தவிர்த்தல், மரம் நடுதல் மற்றும் துணிப்பைகளைப் பயன்படுத்துவதன் அவசியத்தைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.இவ்விழாவை தி பிரிட்ஜ் டிரஸ்ட் நிறுவனர் மதிவாணன், 51-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாபி கதிரவன், கல்லூரி முதல்வர் அருட்சகோ தரி முனைவர் ஆரோக்கிய ஜெய்சீலி ஆகி யோர் முன்னின்று தொடங்கி வைத்தனர்.
மேலும், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) அலுவலர்கள் அமுதா, காய த்ரி, அஸ்வினி, அனுராதா மற்றும் தன பாக்கியம் ஆகியோர் ஒருங்கிணைந்து இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்தினர். இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக