தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, விளாத்திகுளம், கயத்தாறு, திருச்செந்தூர், ஏரல், எட்டயபுரம் உள்ளிட்ட தாலுகா வட்டாட்சியர் பணியிடங்களில் பணிபுரிபவர்கள் பணியிட மாற்றம்.
இது தவிர பேரிடர் மேலாண்மை, இந்து சமய அறநிலையத்துறை, சிப்காட், உடன்குடி அனல்மின் திட்டம் மற்றும் டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சிறப்பு பணியிடங்களில் பணியாற்றி வந்த வட்டாட்சியர் நிலை அலுவலர்களுக்கும் இடமாற்றம் மற்றும் புதிய பணியிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பணிமாறுதல் செய்யப்பட்ட அலுவலர்கள் அனைவரும் எவ்வித தாமதமுமின்றி உடனடியாகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய பணியிடங்களில் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாறுதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மேல்முறையீடுகள் மற்றும் மறு பணிமாறுதல் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படவோ ஏற்கப்படவோ மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக