பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பஞ்சமி நிலம் மீட்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 செப்டம்பர், 2026

பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பஞ்சமி நிலம் மீட்பு.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநருங்குன்றம் கிராமத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறப்படும் சுமார் 14 சென்ட் பஞ்சமி நிலம், தொடர் சட்டப் போராட்டம் மற்றும் முயற்சிகளின் மூலம் மீட்கப்பட்டு, உரிய நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருநருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு சொந்தமான அபு சர்வே எண் 60/2-ல் உள்ள சுமார் 14 சென்ட் பஞ்சமி நிலம், பல ஆண்டுகளாக சேகர் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பஞ்சமி நிலத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களையும், சட்டரீதியான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளிக்கப்பட்டதுடன், நிலத்தின் உரிமை மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர் முயற்சிகளின் பலனாக, சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் நிலம் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர்களான பழனிவேல் மற்றும் பாலமுருகன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி மாவட்ட துணைச் செயலாளர் அ.வசந்தன், நகர செயலாளர் க.தீந்தமிழன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் ம.பாலமுருகன், ஒன்றிய நிர்வாகி பரந்தாமன், விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாவட்ட துணை அமைப்பாளர் சாமிக்கண்ணு உள்ளிட்டோர் முக்கிய பங்காற்றினர்.

மேலும், முருகன், சிவா, தர்மதுரை, விக்ரம் உள்ளிட்டோரும் இந்த சட்டப் போராட்டம் மற்றும் நில மீட்பு நடவடிக்கையில் பங்கேற்று தொடர்ந்து முயற்சி மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறப்பட்ட பஞ்சமி நிலம் சட்டரீதியான நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad