ஜோலார்பேட்டை அருகே அரசு மகளிர் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் பெற்றோர்கள் சாலை மறியல் !
வாணியம்பாடி, செப்டம்பர் 9-
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 900 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில் அப்பள்ளி யின் தலைமை ஆசிரியை சாந்தி பணி யிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.இதற்கு எதிர்ப்புதெரிவித்த மாணவிகளின் பெற்றோர்கள், தலைமை ஆசிரியை மீது இதுவரை தாங்கள் எந்த வித புகாரும் அளிக்கவில்லை என்றும், அவர் மாணவிகளை நல்ல முறையில் வழிநடத்தி வந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும், தலைமை ஆசிரியை சாந்தியை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி, ஜோலார் பேட்டை–நாட்றம்பள்ளி பிரதான சாலை யில் 200-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் துணைகாவல் கண்காணிப் பாளர் முரளி, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார்.அப்போது, மாவட்ட கல்வி அலுவலரி டம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, பெற் றோர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தலைமை ஆசிரி யை சாந்தியை மீண்டும் ஜோலார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலே யே பணியமர்த்த வேண்டும் என பெற் றோர்களும் மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக