இஸ்லாமியர்களை பிரிக்கும் விஷ்வ இந்து பரிஷத்திற்கு ஜி ஜி கண்டனம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 செப்டம்பர், 2026

இஸ்லாமியர்களை பிரிக்கும் விஷ்வ இந்து பரிஷத்திற்கு ஜி ஜி கண்டனம் !

இஸ்லாமியர்களை பிரிக்கும் விஷ்வ இந்து பரிஷத்திற்கு ஜி ஜி கண்டனம் !
தேசிய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜி ஜி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை கூறியிருப்பதாவது

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்க இருக்கும் நவராத்திரி விழாவின் போது நடைபெறும் கர்பா. தாண்டியா, போன்ற நடன நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்கள் பங்கெடுக்கக் கூடாது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கம் தடை விதித் திருப்பது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல இந்த நாட்டிற்காக நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக லட்சோப லட்ச இஸ்லாமிய உறவுகள் தமது உடமைகளையும் உயிரை யும் தியாகம் செய்து சுதந்திரம் அடைய மிக முக்கிய காரணமாக அமைந்தார்கள். ஆனால் ஆர் எஸ் எஸ்  சங்பரிவார் சங்கங் கள் நம் நாட்டிற்காக ஒரே ஒரு சதவீதம் கூட போராடியதோ நாடு நன்மை அடைய துணையாய் இருந்ததோ வரலாற்றில் எந்த இடத்திலும் அதற்கான ஆதாரங்கள் இல்லை ஆனால் இஸ்லாமிய மக்கள் போராடியது நாடு எங்கும் பல வரலாற்று நூல்களும் கல்வெட்டுகளும் பரவி கிடக் கிறது அது மட்டும் அல்லாமல்இஸ்லாமிய மக்கள் தமது சொத்துக்களை இந்தியா முன்னேற தானமாக கொடுத்திருக்கிறார் கள் இன்று அந்த சொத்துக்களின் மதிப்பு விலைமதிப்பற்றது விலை வைத்தாலும் எண்ணில் அடங்காது என்பதை நாடு அறியும் இந்தியாவை தற்போது ஆண்டு கொண்டிருக்க கூடிய  பாஜக அரசே அறியும். இப்படி எண்ணற்ற தியாகங் களை செய்து இந்தியா முழுவதும் அனைவரின்  மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கும் தொப்புள் கொடி உறவாக சொந்தமாக இருக்கும் இஸ்லாமியர் களை மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்ள விஷ்வ இந்து பரிஷத் தடை விதித்து இஸ்லாமியர்களை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் மேலும் அந்நிகழ்வில் பங்கேற்கின்ற போது ஆதார் அட்டையை காண்பித்து உள்ளே வர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது மனிதநேயம் அற்ற செயல் இது இந்தியாவிற்கு உலக நாடுகள் மத்தியில் தலைகுனிவையும் இந்திய மக்கள் மனதில் இந்தியாவை நேசிக்கக் கூடிய மக்கள் மத்தியில் பெரும் வேதனையையும் ஏற்படுத்தும் இது போன்ற கேவலமான வன்முறை தூண்டக் கூடிய பேச்சுகள் மூலம் அமைதியை சீர்குலைக்கும்  வகையில் அமையும் பிரித்தாலும் சூழ்ச்சியை கையில் எடுத்து ஆதாயம் தேட துடிக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்தை  உடனுக்குடன் மத்திய பாஜக அரசு விஷ்வ இந்து பரிஷத் இயக்கத்தை எவ்வித தயக்கமும் இன்றி தடை செய்ய வேண்டும் மேலும் உச்ச நீதிமன்ற தலை மை நீதியரசர் இது போன்ற இயக்கங்க ளை ஆய்வுகள் மேற்கொண்டு தனி விசாரணை அமைப்பை ஏற்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீது வன் மத்தை கட்டவிழ்த்து மக்கள் மத்தியில் இருந்து தனிமைப்படுத்த துடிக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் சங்பரி வார் சங்கங்களுக்கு தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைமையின் சார்பாக வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு ஜிஜி குறிப்பிட்டிருக்கிறார்

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad