முதலமைச்சர் கோப்பை 2026, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் !
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சி யர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் முதலமைச்சர் கோப்பை 2026, மாவட்ட அளவிலான விளையாட்டு
போட்டிகளை தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்
ந.ப்ரியா ரவிச்சந்திரன், வாலாஜா வட்டம், வன்னிவேடு அரசினர். மேல் நிலைப் பள்ளியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார் பில் முதலமைச்சர் கோப்பை 2026, மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்கள் மட்டைப்பந்து போட்டியை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு வாழ்த்துக் களை தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி மாணவி களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற்று வருகின்றன அரசினர் மேல்நிலைப்பள்ளி, ராணிப்பேட்டை கைப்பந்து மற்றும் கபாடி DAV பெல் பள்ளி கால்பந்து மற்றும் கையுந்துப் பந்து ஸ்ரீ இராமகிருஷ்ணா பெல் மேல் நிலைப்பள்ளி - கோ-கோ லாலாபேட்டை
(தொடுமுறை) அரசினர் மேல் நிலைப் பள்ளி சிலம்பம் ஆற்காடு அரசினர் பெண் கள் மேல்நிலைப்பள்ளி - மேசைப்பந்து
ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி - வளைகோல் பந்து
ஆற்காடு ஸ்ரீ இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சதுரங்கம் சிறுமலர் மடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராணிப்பேட்டை கூடைப்பந்து Young Master Badminton Academy, தாழனூர் இறகுப்பந்து மாணவ, மாணவி இப் போட்டிகளில் ராணிப்பேட்டை மாவட்டத் தைச் சேர்ந்த மாணவியர்கள் ஆர்வத்து டன் கலந்து கொண்டு தங்களது விளை யாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.முதலமைச்சர் கோப்பை 2026 மாவட்ட அளவிலான விளையாட்டுப்
போட்டிகள் 09.09.2026 முதல் 30.09.2026 வரை பள்ளிப் பிரிவு, கல்லூரிப் பிரிவு,
பொதுப் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து
பிரிவுகளில், ராணிப்பேட்டை மாவட்டத் தின் பல்வேறு விளையாட்டு மைதானங் கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நடைபெறவுள்ளன. முதல மைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான போட்டி அட்ட வணை, பதிவு மற்றும் இதர விவரங்க ளை tncmtrophy.sdat.in இணையதளத்தில்
பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.
மாணவ, மாணவியர்களிடையே விளை யாட்டு ஆர்வத்தை அதிகரித்தல், அவர் களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணருதல் மற்றும் சிறந்த
விளையாட்டு வீரர், வீராங்கனைகளை அடையாளம் காணுதல் ஆகிய நோக் கங்களுடன் இப்போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிகழ்ச்சி யில் முதன்மை கல்வி அலுவலர் மோகனா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகராணி சக்திவேல், தலைமையாசிரியர் சதீஷ் குமார் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக