வேலூர் பழைய மீன் மார்க்கெட் அருகே குவிந்துள்ள குப்பைகள் துர்நாற்றத்தால் பொது மக்கள் அவதி நோய் பரவும் அபாயம் !
வேலூர் மாவட்டம், வேலூர் பழைய மீன் மார்க்கெட் வெளிப்புற பகுதியில் சுகா தாரமற்ற முறையில் அதிகளவில் குப் பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக் கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.பொது மக்கள், குழந்தைகள், மார்க்கெட் வியாபாரிகள், பெரியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் தின மும் நடமாடும் இப்பகுதியில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரி விக்கின்றனர். எனவே, பொது மக்களின் நலன் கருதி பழைய மீன் மார்க்கெட் பகுதியில் தேங்கும் குப்பை களை தினந்தோறும் அகற்றி, துர்நாற்றம் ஏற்படாத வகையில் தூய்மையைப் பராமரிக்க வேண்டும். மேலும், பொது சுகாதாரத்தை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக