தென்திருப்பேரை - திருக்கோளூர் கோவில் தேரோட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 செப்டம்பர், 2026

தென்திருப்பேரை - திருக்கோளூர் கோவில் தேரோட்டம்.

தென்திருப்பேரை - திருக்கோளூர் கோவில் தேரோட்டம்.

தென்திருப்பேரை, செப் 16, தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் எட்டாவது கோவில் திருக்கோளூர் திவ்ய தேசம். 

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் கொடி ஏறி 12 நாட்கள் உற்சவம் நடைபெறும். 

மதுரகவி ஆழ்வார் அவதார ஸ்தலம். 9 ம் திருவிழாவான இன்று தேரோட்டம் நடந்தது. காலை 4.30 மணிக்கு விஸ்வரூபம். 5 மணிக்கு நித்தியல். 6.40 மணிக்கு உற்சவர் வைத்தமாநிதி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் தேரில் எழுந்தருளினார். 

9 மணிக்கு கோவிந்தா கோபாலா கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தார்கள். 10.55 தேர் நிலைக்கு வந்தது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் பாலாஜி. சீனிவாசன் விகனசன். ஸ்தலத்தார்கள் ஸ்ரீதரன். சடகோபன். சுந்தரராசன். 

நிர்வாக அதிகாரி சதீஷ் ஆய்வாளர் நம்பி. அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன் உறுப்பினர்கள் ராமலட்சுமி. காளிமுத்து. பொன்ராஜ். கன்னிராஜா. கள்ளப்பிரான் கோவிலில் 

ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி. ஊர்த் தலைவர் கிருஷ்ணன். சீனிவாச அறக்கட்டளை ஆலோசகர் விஜயகுமார். பொறியாளர்கள் பிரகாஷ். கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad