பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் இடி தாக்கி மின்னணு இயந்திரங்கள் சேதம் உடனடியாக பழுதுகளை சீரமைத்த அதி காரிகள் – போக்குவரத்து வழக்கம் போல் இயக்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 செப்டம்பர், 2026

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் இடி தாக்கி மின்னணு இயந்திரங்கள் சேதம் உடனடியாக பழுதுகளை சீரமைத்த அதி காரிகள் – போக்குவரத்து வழக்கம் போல் இயக்கம் !

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் இடி தாக்கி மின்னணு இயந்திரங்கள் சேதம்
உடனடியாக பழுதுகளை சீரமைத்த அதி காரிகள் – போக்குவரத்து வழக்கம் போல் இயக்கம் !
அணைக்கட்டு , செப்டம்பர் 15 -
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலு கா, பள்ளிகொண்டா டோல் பிளாசா சுங்கச்சாவடி, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங் களாக மழைப்பொழிவு குறைவாக இருந் தது. இந்நிலையில், இந்த வாரத்தில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. 
வாலாஜா முதல் கிருஷ்ணகிரி வரையி லான தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் பள்ளி கொண்டா வாலாஜா – கிருஷ்ணகிரி டோல் பிளாசா நிறுவனத்தின் சுங்கச் சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.05 மணியளவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது.தொடர்ந்து, சுமார் 12.25 மணியளவில் சுங்கச்சாவடி லேனில் பொருத்தப்பட்டிருந்த கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட மின்னணு இயந்திரங்களை இடி தாக்கி மின்னணு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளது. இதையடுத்து, சுங்கச்சாவடியின் தொழில்நுட்ப அதி காரிகள், அலுவலர்கள் மற்றும் பணி யாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற் குச் சென்று பழுதடைந்த இயந்திரங் களை ஆய்வு செய்தனர். பழுதடைந்த இயந்திரங்களை மாற்றியமைத்து, சேதம் அடைந்த இயந்திரங்களை சரி செய்துள் ளனர். இதனால் போக்குவரத்திற்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் வாகனங்கள் மாற்று வழித்தடத்தில் அனுப்பப்பட்டு, சுங்கச்சாவடி வழியாக போக்குவரத்து வழக்கம்போல் இயங்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இடி தாக்கி பெருமளவு மின்னணு பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் இதன் மதிப்பு இதுவரை குறிப்பிட முடியாத அளவில் சேதம் ஆங்காங்கே அதிகரித் துள்ளது என அதிகாரிகள் தெரிவிக் கின்றனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad