கனிம வளம் கொண்டு செல்லும் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2026

கனிம வளம் கொண்டு செல்லும் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குவாரிகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளிலிருந்து கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் AIS 140 (Automotive Industry Standard No.140) GPS கருவியை நிறுவி அவற்றை MiMaS portal-உடன் இணைப்பதற்கு கடந்த 31.08.2026 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. 

ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் நாளது தேதிவரையில் சுமார் 12% வாகனங்களுக்கு மட்டுமே AIS 140 GPS கருவியினை பொருத்தி MiMaS portal-உடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் 30.09.2026-க்குள் கனிமங்கள் எடுத்துச் செல்லும் அனைத்து வானகங்களிலும் GPS கருவி பொருத்தி அவற்றை MiMaS portal-உடன் இணைக்கப்பட வேண்டும். 

மேலும், எதிர்வரும் 30.09.2026-க்குள் GPS கருவி பொருத்தி MiMaS portal -ல் இணைக்கப்படும் வாகனங்களுக்கு மட்டுமே 01.10.2026 முதல் கனிமங்கள் எடுத்துச் செல்ல நடைச்சீட்டு வழங்கப்படும், GPS கருவி பொருத்தப்படாத வாகனங்களுக்கு கனிமங்கள் எடுத்துச்செல்ல நடைச்சீட்டு வழங்க இயலாது. 

எனவே, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து குவாரி உரிமையாளர்கள், கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் 30.09.2026-க்குள் தங்களது வாகனங்களில் AIS 140 GPS கருவியினை பொருத்தி MiMaS Portal இல் பதிவு செய்துக்கொள்ளுமாறு இதன் மூலம் இறுதியாக அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad