உளுந்தூர்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா டிஎஸ்பி அசோகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் கரைப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 செப்டம்பர், 2026

உளுந்தூர்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா டிஎஸ்பி அசோகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் கரைப்பு.


கள்ளக்குறிச்சி மாவட்டம்,
உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா பக்தி மற்றும் உற்சாகத்துடன் நடைபெற்றது. விழாவையொட்டி நகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

விநாயகர் சதுர்த்தி விழாவைத் தொடர்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் புதன்கிழமை உளுந்தூர்பேட்டை அருள்மிகு முருகன் கோவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன

உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அசோகன் தலைமையில், ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேள தாளங்கள் முழங்க, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்ட ஊர்வலம், உளுந்தூர்பேட்டையின் முக்கிய கடை வீதிகள் மற்றும் வணிகப் பகுதிகள் வழியாகச் சென்றது.

ஊர்வலம் இறுதியாக உளுந்தூர்பேட்டை பெரிய ஏரியை சென்றடைந்தது. அங்கு காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் கண்காணிப்பில் விநாயகர் சிலைகள் முறைப்படி நீரில் கரைக்கப்பட்டன.

மேலும், உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார கிராமப்புறப் பகுதிகளிலும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி, விநாயகர் சதுர்த்தி விழாவை விமரிசையாகக் கொண்டாடினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad