உளுந்தூர்பேட்டை அருகே 32 அடி முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகப் பெருமானை வழிபாடு செய்தனர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 செப்டம்பர், 2026

உளுந்தூர்பேட்டை அருகே 32 அடி முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகப் பெருமானை வழிபாடு செய்தனர்


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட 32 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புண்ணிய தீர்த்தங்களை கலசத்தில் வைத்து யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கோமாதா பூஜை, கணபதி பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்பு இன்று காலை மங்கள வாத்தியங்கள் இசைக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.

பூஜை செய்யப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் வைக்கப்பட்டிருந்த கலசங்கள் மங்கள வாத்தியத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, முருகப்பெருமானின் தலை கலசத்தின் மீது சிறப்பு பூஜை செய்யப்பட்டு புனித நீர் ஊற்றி பட்டாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

தொடர்ந்து மூலவர் முருகனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்ட பின்பு பரிவார தெய்வமான விநாயகருக்கும் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதனை அடுத்து கோயில் முன்பு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு பூக்கள் தூவப்பட்டது. இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 'முருகா முருகா' என பக்தி கோஷம் முழங்க முருகப்பெருமானை வழிபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad